என் மனதில் எழும் கேள்விகளின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாயிருக்கிறது. என்னால் அதை கட்டுபடுத்தவும், பதிவு செய்யவும் இயலவில்லை. கொஞ்ச நாளாகவே எனக்கு இந்த உலகம் ஒரு இருண்ட பாலைவனமாக தெரிகிறது. என் பார்வையின் குற்றமா? அல்லது உண்மையிலேயே அப்படிதானா? என்று என்னால் ஒரு தீர்மானத்திருக்கு வர முடியவில்லை.
கேள்வியால் மடமை அகலும் என்கிறார்கள். இங்கு அதுவே பெரிய பிரச்சனையாக உள்ளது. பயம், கூச்சம், தாழ்வு மனப்பான்மை இவற்றையெல்லாம் கடும் போராட்டங்களுக்கு பின்பு தவிர்த்து கேள்வி கேட்டால், குதர்க்கம் பேசுகிறான் என்கிறார்கள். எள்ளி நகையாடும் இவர்களை பார்த்தல் எனக்கு பாவமாய் இருக்கிறது.
மண்ணில் ஜனனிக்கும் குழந்தை மேதையாவது அதன் மனதில் எழும் சில கேள்விகளாலும் அதற்கு பதில் தேட, செயல் உருவம் கொடுக்க முற்படுகையுலும் தான். பூட்ட பட்டிருக்கும் மனக்கதவை உடைத்தெறிந்து எண்ணங்களை மேகமாய் பறக்க விடுங்கள் அதன் எழுச்சிக்கு தடை போடாதிர்கள். கேள்விகளை எழுப்புங்கள் இருண்டு போன மதியை வெளிச்சத்திருக்கு கொண்டு வாருங்கள்.
இதோ என் அர்த்தம் புரியாத, பதில் காண கடினமான கேள்விகள் எனக்கும் மற்றவர்களுக்கும்,
நாம் யார்?
ஏன் பிறந்தோம்?
நாம் பிறந்ததின் நோக்கம்? சாதிக்க என்றால்
என்ன சாதிக்க? எதையாவது என்றால் அதை
சாதித்து என்ன செய்ய போகிறாய்? சரி சாதனையாகிவிட்டது. அது எது வரை நிலைக்கும். சாதனையின் விளைவு என்ன? அது மாற்றம் என்றால் பிறரால் முறியடிக்கும் வரையிலா?
ஏன் இந்த போராட்டம்? இதற்கான விடை நம் பொருளாதார நிலைகள், தற்காப்பை எடுத்து இயம்புகிறது.
வாழ்க்கை என்றால் என்ன?
உலகம் என்றால் என்ன?
மேற்கண்ட கடைசி இரண்டு கேள்விகளுக்கான விடை ஓவ்வொருவருக்குள்ளும் வேறுபடுகிறது.
தனிப்பட்ட வரையறைகள் நான் இது வரை கண்டதில்லை.
வாழ்க்கை போராட்டம் என்றால் என்ன? அதன் முடிவு தான் என்ன?
பிறந்தவுடன் புவியின் தட்ப வெட்பங்களை தாங்கி கொள்வதிலிருந்து, வளர்வது, புரிந்து கொள்வது, மற்றவர்களுடன் ஒன்றி போவது, கல்வி கற்பது, வேலை தேடுவது, பிறகு அதில் நிலைத்து முன்னேறுவது, பணம் சம்பாதிப்பது,
பொருள் தேடல் , துணை தேடல், புதுமையை ஏற்றுகொள்வது, என்று எத்தனை எத்தனை போராட்டங்களை திரும்ப திரும்ப மனிதர்கள் எதிர் கொள்வது. இதன்முடிவு தான் என்ன?
கேள்விகள் தொடரும்....
New idea is a myth untill one reaches it
பதிலளிநீக்குhi dude
its so nice to ask questions most people cannot answer ur questions bcoz they may not know it or may thought that its a so called realistic(from their point of view).
Keep asking to world and yourself
all d best
hi,
பதிலளிநீக்குi like your way of thoghts
keep it up.
i need more.
there is no answer many questions.
the whole life after you have remaining many "WHY" only
because life is like that.but i appreciate you
some should realise to think the world in different way.
"be a best human of the wold"
i hope you also a part
take care
I think you will get a better idea from this site: http://www.kelvi.tk
பதிலளிநீக்குTry it. You will go crazy