தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்

  இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல்   வேண்டும் என்ற பாரதியின் கனவு  சில விழுக்காடுகளே  நிறைவேறி உள்ளது. தமிழில்  இன்னும் கணிப்பொறியில் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பங்கள் இயற்றப்படாமல்  இருப்பது தமிழில் போதிய  கலைச்சொற்கள்  இல்லாததே  காரணம் .

    ஒரு மருத்துவரின் குறிப்பும், மருந்தும் பிறருக்கு புரியாததின் கரணம் அவற்றின் தமிழ்ச்சொற்கள் இல்லாமையே ஆகும். தகவல் தொழில் நுட்பத்தை பொறுத்தவரை ஆயிரகணக்கில்   தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட வட்டாரத்துக்குள்ளேயே புழக்கத்தில் இருக்கும் இந்த சொற்களை வெளிக்கொணரவேண்டும்.

 
 பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ் மொழியில் பெயர்க்க தமிழில் புதிய சொற்களை நிறுவுதல் அவசியம். அதைவிடுத்து கன்னித்தமிழ், கலங்க படுத்த மாட்டோம்  என்ற வறட்டு பிடிவாதத்தில் தமிழ் என்றும் வளராது. பாரதியின் தமிழ் இனி மெல்லச்சாகும் கூற்று மெய்படாமல் இருக்க தமிழ் அகராதியில் சொற்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர வேண்டும்.

    
    தகவல் தொழில் நுட்பத்தில் வல்லுனர்கள் திக்கெட்டும்  பயன்படுத்தும் தமிழ் கலைச்சொற்களை ஒன்றாக தொகுக்க வேண்டும். அவைகளை தமிழ் அகராதியில் சேர்க்கவும் மாணவர்கள் அதை பயன்படுத்தவும் செய்தால் மட்டுமே தமிழ் மொழியின் வளர்ச்சியை காணமுடியும்.

     தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேசுபவர்களின் எண்ணிகையில் மட்டுமன்றி சொற்களின் எண்ணிக்கையிலும் அடங்கியிருகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை.

    சர்வதேச மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களை கலைச்சொற்கள் பயன்படுத்தகோரி வற்புறுத்த வேண்டும். மேலும்


            www.inifitt.org
            www.tcwords.com
            www.tamilvu.org
            www.bhashaindia.com
            www.microsoft.com
  
     மற்றும் பிற பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ள அனைத்து இணையம் சார்ந்த கலைச்சொல் படைப்புகள் தொகுக்க பட வேண்டும்.

      இவை நிறைவேறினால், உங்களால் நிறைவேற்ற பட்டால் தமிழ் அடியெடுக்கும், இல்லையேல் தமிழின் நிலைமை?



கருத்துகள்

  1. மொழி மேலும் மேலும் வளர புதிய சொற்கள் சேர்க்கப்படவேண்டும். சொல் வங்கியின் வளர்ச்சியே புதிய சொல்லாடல்களுக்கு வழிவகுக்கும். கலைச் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அவை தமிழ் வளர்ச்சிக்குப் பயன் படுத்தப்படவேண்டும். சிறந்த கருத்துகள். சில மொழிப் பிழைகள் உள்ளன. சரி செய்ய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நண்பா சென்ற வருடம் நவம்பர் 23, 2009 அன்று நீ எழுதிய இடுகையை நான் இன்று படித்தேன் . மிக அருமை,சிறந்த கருத்துகள்

    உன் நண்பன்
    ரமேஷ்.கு
    மூன்றாம் ஆண்டு முதுகலை கணிபொறி அறிவியல் மாணவன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக