"உண்மை பேசுக"! – என்று விதிக்கிறது வேதம்.
"தீங்கு விளைவிக்கும் உண்மை சத்தியம் இல்லை. குற்றமற்ற நன்மை தருமமானால் பொய்யைக்கூட சத்தியத்தைச் சேர்ந்ததாகவே கருத வேண்டும்" என்று திருக்குறள் சொல்கிறது.
"சத்யம் வத" – என்னும் வேதவாக்கு சாசுவதமான உண்மை.
"தர்மம் சர" – தர்மத்தின்படி செயல்படுங்கள் என்கிறது பௌதம்.
"ஸ்மிருதி"யில் மிகவும் இக்கட்டான நேரத்தில் தருமத்தை விட்டு "ஆபத்தருமம்" கடைப்பிடிக்கலாம் அது குற்றமில்லை பாபமில்லை என்கிறது.
எந்த அளவுக்கு முரண்பாடுகள் பாருங்கள். இந்த சமுதாய முரண்பாடுகள் தான் மனிதனை "குளறுபடிகள்" செய்ய வைக்கின்றன. யதார்த்தங்கள் வேறு, மரபுகள் வேறு.
வாழ்க்கையில் இவ்வளவு சிக்கல்கள் இருக்க, எதையும் நாம் என்றென்றும் மாறாத "நிரந்தர சாசுவத சத்தியம்" என்றோ, நாம் கடைப்பிடிக்க வேண்டிய அற ஒழுக்கம் என்றோ சொல்ல முடியாது. சொன்னாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பது தான் உண்மை.
உண்மை என்பது என்ன?
நம் பார்வைக்கு கிடைத்ததையும், செவிகளுக்குக் கிடைத்ததையும்,
வைத்து உண்மை என்று கூறிவிட முடியாது. முன்னோர்களும், மதங்களும், ஆசானும், கூறுவது உண்மை என்று தீர்மானித்து விட முடியாது.
எந்த இடத்தில் எதைச் சொல்வது சரியானது என்று பகுத்து உணர்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி பகுத்து அறிந்து பார்த்து பேசுவது தான் "உண்மை" எனப்படும்.
அறிவியல் அணுகு முறையில் உயிர்நிலையான கோட்பாடு:
"நிகழ் செய்திகளில் கருத்தைச் செலுத்துங்கள். அவற்றைக் கண்டு சொன்னவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
[Focus on the facts, not on the individuals observing them]
வரலாறு, சமுதாயவியல், பொருளாதாரம், அரசியல், சமயல் கலை, விமர்சனம், போன்ற துறைகளில் கூட அறிவியல் அப்ரோச் (Scientfic approach) என்று சொல்லும் அறிவியல் அணுகு முறை பொதுவாக நன்மை பயக்கும் என்று
பல அறிஞர்கள் சொல்கிறார்கள்.
விஞ்ஞான நிகழ் செய்திகளையும், கோட்பாடுகளையும், யாரும் எந்த தேசத்திலும் எந்த சமயத்திலும் பரிசோதனை நடத்திச் சரி பார்த்துக் கொள்ளலாம்.
[Scientific facts and principles are always verifiable through suitable experiments]
பரிசோதனை நடத்துபவர்களின் நிறம், குணாதிசயங்களால், உண்மை மாறிப் போகாது. விஞ்ஞான நிகழ்செய்திகள் அகில உலகத்திற்கும் பொதுவானவை. அவற்றின் நடுநிலைமை, தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்புக்களையோ, மனநிலைச் சூழலையோ, பொறுத்தவை அல்ல!
எனவே தான் மனித சுதந்திர சித்தாந்தம் மனித குல மேம்பாட்டிற்கு விஞ்ஞானத்தை முக்கிய துணையாக வைத்திருக்கிறது. நம் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கப்படும் வேதாந்தமும், சித்தாந்தமும் அறிவியல் வழிமுறை தான். ஒவ்வொரு பகுத்தறிவாதியும் அதைத் தான் செய்துக் கொண்டிருக்கிறான்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு