ஆசைகள்!


ஆசையே! துன்பத்திற்கு காரணம் என்ற புத்தனனின் வார்த்தைகளை நான் அமோதிக்கிறேன். அதே சமயத்தில் எதிர்க்கவும் செய்கிறேன். மண்ணில் காணும் பொருட்கள் யாவும் எண்ணற்ற  மனிதர்களின் ஆசையால் விளைந்தனவே!. ஆழ்ந்து யோசித்தால் ஆசைகளே!  இங்கு இல்லாவிட்டால் இவ்வுலகம் இயக்கமற்று ஸ்தமித்து போய்விடும். 

ஜனிக்கும் சிசுவிலிருந்து, நாம் கண்ணால் காணும் பொருட்கள், கருவிகள் , ஆயுதங்கள், வாகனங்கள், ஆடைகள், விண்ணை பிளக்கும் கட்டிடங்கள் அனைத்தும் மனிதர்களின் ஆசைகளின் வழி தோன்றல்கள் . எண்ணத்தில் எழும் எழுச்சியின் ஆக்கபூர்வங்கள்   இவைகள். 

இதுவரை அறிந்ததும், அறிய முற்படுவதும் ஆசையின் வெளிப்பாடுகளே!.  ஆசை அளிப்பது மட்டுமல்ல ஆக்கத்திற்கும் காரணம் அதுதான். எவன் ஒருவனுக்கு ஆசையும் அதற்கான ஆயத்த முயற்சிகளும் இல்லையோ அவன் இங்கு ஒரு ஜடமாகவே கருதப்படுவான்.



ஒருவனிடம்  ஆசை + முயற்சி + நல்லெண்ணம் இருந்தால் அவனைச்சுற்றி இருப்பவைனைத்தும் கற்பம் தணிக்கும், புதியவைகள் விளையும். சுற்றுசூழல்கள் செழிக்கும்.திருப்தி தோன்றும்.  இன்பம் மலரும். ஒழுங்கு பெரும். இம்மொன்றில் எது குறைந்தாலும் புத்தனின் வார்த்தை மெய்ப்படும்.


சரி ஆசை எப்போது உருவாகும்?

ஆழ்ந்து யோசித்தால்  கற்பனை, எண்ணம், பார்வை என்ற இந்த மூன்றின் வழியாகவே ஆசை பிறக்கிறது. முயற்சியின்மை, தீய மற்றும் தவறான எண்ணங்கள் மிகுந்த துன்பங்களை கொண்டு வருகிறது. மற்ற வகையிலான துன்பங்கள் ஆசை நிறைவேறும் போது மறக்கபடுகின்ற்ன. 

ஆதனிலினால் சொல்லுகிறேன் எனதருமை தோழர்களே!
ஆசை படுங்கள்!, அதற்காக ஆயத்தபடுங்கள்!. முன்னேறுவீர்கள்!. வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
இது நிச்சியம்.

கருத்துகள்

  1. என் எதிர் வாதங்கள்:
    *புத்தர் பேராசை தான் வேண்டாமென்றார்.
    *குழந்தை பிறப்பதே ஆசையால் என்பதை நான் ஏற்க மாட்டேன். அது உடலின் தேவையே அன்றி ஆசை அல்ல.
    *புத்தர் ஒரு தீர்க்க தரிசி, இந்த வளர்ச்சிகளால் மனிதன் துன்பத்தை அன்றி வேறென்ன கண்டான்.இன்று கொண்டாட படும் அறிவியல் வளர்ச்சி, பூமியின் ஆயுளையும் மனிதனின் ஆயுளையும் குறைக்குமே அன்றி வேறன்ன செய்யும். இந்த எந்திரங்கள் செல்வத்தை ஓரிடத்தில் குவித்து, வாழ்வை எளிமையாக்கி குறுகலாக்கி விட்டது.

    இதனால் நான் இயல்பு நிலையறியாமல் தத்துவம் பேசும் கற்பனாவாதி என நினைக்க வேண்டாம். இது பற்றி விரிவாக என் வலைப்பூவில் ஒரு இடுகை இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆசை என்பதற்கு இங்கு அளவே கிடையாது. அளவு அவரவர்களின் தகுதியை பொறுத்துள்ளது.
    முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படக்கூடாதா ? இல்லை முயற்சிதான் செய்யக்கூடாதா?
    பேராசை, ஆசை எல்லாம் ஒன்றுதான்.

    தேவைகளே ஆசையின் வெளிபாடுதனே?.

    யோசித்தால் துன்பங்களின் விளைச்சல் தானே இன்பமாகிறது?

    பதில் தங்கள் புதிய இடுகையில் காண விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உன் கேள்விகளுக்கான பதில் நெடியதாக உள்ளதால் தனி இடுகையாக இடுகிறேன்.

    ஆனால் முன்பு நான் இடுவதாக சொன்னது பெரிய விடயம். அதற்கு சற்று காலம் பிடிக்கும்.

    just follow this link
    http://john-a-comrade.blogspot.com/2010/03/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  4. நண்பா சென்ற வருடம் நவம்பர் 23, 2009 அன்று நீ எழுதிய இடுகையை நான் இன்று படித்தேன் . மிக அருமை,சிறந்த கருத்துகள்

    உன் நண்பன்
    ரமேஷ்.கு
    மூன்றாம் ஆண்டு முதுகலை கணிபொறி அறிவியல் மாணவன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக